லிட்ரோ நிறுவனம் 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு விநியோகம்!

Share

யாழ் மாவட்டத்திலுள்ள சகல மக்களுக்கும் தேவையான எரிவாயு வழங்கும் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒத்துழைக்காவிட்டால் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களுக்கான எரிவாயுவினை விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளகதகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் லிட்ரோ காஸ் நிறுவனத்தினரால் நாடுபூராகவும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயுவினை குடும்ப பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்க முற்பட்டபோது யாழ்மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குடும்ப அட்டை மூலம் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் அதேவேளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் போது எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதை கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் உதவியினை பயன்படுத்தி குறித்த எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட செயலக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...