VideoCapture 20220524 174030
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிவாயு வரிசை! – மக்கள் போராட்டம்

Share

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ் நகரில் சிறிது நேரம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

எரிவாயு சிலிண்டர் விநியோகிப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்தனர்.

இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைபட்டதுடன் குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் வீதியை மறித்து போராடிய பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று காலை முதல் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அங்கு வந்திருந்த பொலீசார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு செல்லுமாறும் தெரிவித்தனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அங்கும் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத நிலையில் விரக்தியடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னராக மீண்டும் கொட்டடியில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலை முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு அங்கு இருந்த பொலிஸாருடன் முரண்பட்டனர்.

நீண்ட நேரத்தின் பின்னர் அங்கு மேலதிகமாக பொதுமக்கள் ஒன்றுகூடாதவகையில் தடுக்கப்பட்டு
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு கூடியவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

VideoCapture 20220524 173900 VideoCapture 20220524 174003 VideoCapture 20220524 174016 VideoCapture 20220524 174118 VideoCapture 20220524 174149 VideoCapture 20220524 174050

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVCJGuEkoPbB9Y2NvQE6p
உலகம்செய்திகள்

பெலாரஸ் பலூன்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: லித்துவேனியா அவசரநிலை அறிவிப்பு!

பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய...

25 69388f5211389
உலகம்செய்திகள்

ஜப்பானின் அமோரி மாகாணக் கடற்கரையில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!!

ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த...

d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae
உலகம்செய்திகள்

மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின்...

1700821783 police officer arrested l
இலங்கைசெய்திகள்

ரூ. 5,000 லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜென்ட், கொன்ஸ்டபிள் கைது!

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (டிசம்பர் 11) காலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு...