514a6956 06c9c9cf association of medical specialists
இலங்கைசெய்திகள்

கொரோனா பாதிப்பு இலங்கையில் உச்சம்!!

Share

கொரோனா பாதிப்பு இலங்கையில் உச்சம்!!

கொரோனாவால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது என வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா இறப்புக்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும்போதே இலங்கை அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றது.

சுகாதார ஊழியர்களும் கொவிட் தொற்றுக்குள்ளாதல், ஒக்சிசன் உதவியுடன் இருக்கும் நோயாளர்கள் உள்ளிட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு என்பவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் முனெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொற்று உச்ச நிலையை அடைந்திருந்த போது, அமுல்படுத்தப்பட்ட முடக்கத்தின்போது சட்டங்கள் எதிர்பார்த்தளவில் நடைமுறைப்படுத்தப்படாமை கவலையளிப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...