sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஹரீன், மனுஷவின் செயல் அருவருக்கத்தக்கது! – சஜித் சீற்றம்

Share

“எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் நல்ல கருமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கும் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனவும் நாம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் எமது கட்சியின் முடிவை மீறிச் செயற்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது கட்சியிலிருந்து உறுப்பினர்களை அரசு பக்கம் எடுத்தால் எமது ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் நாம் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். இந்நிலையில், ஹரீனுக்கும், மனுஷவுக்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கியுள்ளதால் அரசுக்கான எமது ஆதரவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூடி பரிசீலிக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...