அரசியல்
பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று, இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே நேற்றைய தினமும் விவாதம் தொடர்ந்தது.
இவ் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்,
” படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூருவதற்காக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடக்கின்றது. எமது மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.” – எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் என சபாபீடத்திடம் முறையிட்டார்.
அப்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான பிரேமநாத் தொலவத்தவே சபைக்கு தலைமை தாங்கினார். இச் சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login