கலவரத்தின் போது உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் வெற்றிடத்துக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலுள்ள ஜகத் சமரவிக்கிரம புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாகவர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது அத்துகோரள கொல்லப்பட்டிருந்தார்.
#SriLankaNews
Leave a comment