beast
பொழுதுபோக்குசினிமா

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்

Share

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது பீஸ்ட்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கட்டம்கட்டமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் முடித்துக்கொண்டு ரஷ்யா பறக்க தயாராகிறது படக்குழு.

படம் தொடர்பில் நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட் வந்தவண்ணமுள்ளது. ஏற்கனவே படத்தின் சிங்கிள் ரக் பாடல் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளதென தகவல் கசிந்துள்ள நிலையில், தற்போது படத்தின் ஓப்பினிங் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் தளபதியின் ஓப்பினிங் பாடல் தமிழ் மற்றும் அரபு மொழி கலந்த பாடல் என்றும், இந்த பாடலை அனிருத்தே பாடி உள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது எனவும், இந்த பாடலில் பூஜா ஹெக்டேயும் நடனமாடி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தில் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த தகவலும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டுபோயுள்ளது.

beast 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...