இலங்கைக்கு 500,000 நியூசிலாந்து டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக நியூசிலாந்து இந்த உதவியை வழங்கவுள்ளது என நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுதா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்கள் தற்போது அனுபவித்துவரும் கஷ்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உணவளிக்கவும், இலங்கையில் போராடும் விவசாயிகளுக்கு உதவவும் தமது பங்கு உதவியை செய்ய விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment