யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணிக்கான தெரிவுப் பரீட்சையானது பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் எதிர்வரும் சனிக்கிழமையன்று (14) நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணி (2021/2022) XIV அணிக்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சையே பிற்போடப்படுவதாகவும் இப் பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment