20220511 150056 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் வைரஸ் காய்ச்சல்! – தமிழ் அரசியல் கைதிகள் பாதிப்பு

Share

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற இன்றைய ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன்
இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்பை உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வைத்தியம் பெறுவதற்கான மருந்துகள் கூட பெரும் தட்டுப்பாடாக உள்ளது.

மேலும் தற்போது சாதாரணமான பனடோலைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. அரசியல் கைதிகளின் உறவினர்கள் இதனை எமக்கு தெரியப்படுத்தி கவலைப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், அரசாங்கம் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்
கருத்திற்கொண்டு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் பலரும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இவ்வாறான நோய்களினாலும் மருத்துவ ரீதியாக புறக்கணிக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டை சூறையாடி பொருளாதாரத்தை நலிவடையச் செய்த நபர்கள் தப்பியோடக்கூடிய சூழலில் சாதாரண குற்றம் செய்ததற்காக 10 தொடக்கம் 26 வருடங்கள் வரை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...