280567890 1802336253306659 8469826415254745084 n
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்பிராந்தியம் மீனவப் படகுகளால் முற்றுகை!!

Share

திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவ சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு திருகோணமலை கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கடற்படைக் கப்பல் மூலம் தப்பிச்ச செல்வத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்படையின் டோரா படகு ஒன்றினுள் மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பம் மறைந்துள்ள நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல தருணம் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில் உள்ள மீனவர்களும் தங்கள் படகுகளுடன் திருமலைத் துறைமுகத்தை நோக்கி விரைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...