நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தைகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது.
இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அருகில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment