இலங்கை
குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை! – கொடிகாமத்தில் எதிர்ப்பு
மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு கள்ளுத் தவறணை அமைப்பதற்கு தற்காலிக தடையை விதித்துள்ளனர்.
கொடிகாமம் வடக்கு மக்கள் வாழும் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கள் விறபனை நிலையமான கள்ளுத் தவறணை இயங்கி வருகிறது.
ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்த தவறணை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஒன்று சேர்ந்து எதிர்பினை வெளியிட்டனர்.
இப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்குமூலத்தை பதிவுசெய்து கொண்டனர்.
வாக்குமூலத்தை பதிவுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த தவறணைக்கான கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தற்காக தடையை அறிவித்தார்.
மக்களின் வாக்குமூலத்திற்கு அமைய நாளையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதுவரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளார். இதனையடுத்து மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
இந்தப் பகுதியில் வசிக்க முடியாதவாறு தகாத வார்த்தைப் பிரயோகம், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாதவாறு மது போதையில் உள்ளவர்களின் அடாவடிகள் என பல வகையான இன்னல்களுக்குத் தாம் முகம் குடுப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.
10 வருடங்களாக இயங்கும் தவறணைக்கு மலசலகூடம் இன்மையால் மதுப்பிரியர்கள் வீதிகளில் சிறுநீர் கழித்தல் மற்றும் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளினால் வீதியால் பயணிக்க முடியவில்லை, அயலில் வசிக்க முடயவில்லை குறிப்பாக பெண்கள், மாணவர்கள் இப் பகுதியால் பயணிக்க முடியவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login