மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழதுள்ளார் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட எருவில் சமுர்த்தி வங்கியில் காசாளராகக் கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் (வயது 58) எனும் அரச உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கிப் பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது என அதனை அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment