Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

முதுகில் ஏறி அரசியல் சவாரி! – 11 கட்சிகளின் கூட்டணி தொடர்பில் அவதானம் தேவை என்கிறார் ராஜித

Share

“11 கட்சிகளின் கூட்டணி எங்கள் முதுகில் அரசியல் சவாரி செய்ய முயல்கின்றது. அந்த பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலைமை மிக நிதானமாக கையாள வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ராஜித சேனாரத்ன.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. சஜித் பிரேமதாச உட்பட கட்சி பிரமுகர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசு யோசனை பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், இடைக்கால அரசுக்குள் சுயாதீன அணிகள் நுழைந்துவிடும். எனவே, காத்திருந்து காய்நகர்த்துவோம் என இதன்போது பிரேரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அங்கம் வகிக்கும் அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால், அது எதிர்கால அரசியலுக்கு சிக்கலா அமைந்துவிடும். எனவே, வெளியில் இருந்துகொண்டு தேவையான ஆதரவை – ஒத்துழைப்பை வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னரே, இடைக்கால அரசை நிராகரிக்கும் வகையில் சஜித் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுவருகின்றார்.

விமல், கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளில் உள்ளவர்கள், எந்நேரத்திலும் காலை வாரலாம். அவர்கள் குறித்து விழிப்பாகவே இருக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன மேற்படி சந்திப்பின்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...