” எனக்கு ஆதரவாக ஆளுங்கட்சி வாக்களித்துள்ளது. எனினும், சுயாதீனமாக செயற்படும் எமது கட்சியின் முடிவு மாறாது. இதில் உறுதியாக இருக்கின்றோம்.”
இவ்வாறு புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி கூறிய அவர், மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எதிரணிகளின் பலத்தை காண்பிக்க இருந்த வாய்ப்பை, எதிரணிகள் தவறவிட்டுவிட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment