” சர்வதேச நன்கொடை மாநாடொன்றை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரச்சினை நீடித்தால் லெபனானுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கு ஏற்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ‘ஏற்படும்’ என்பது அல்ல, அந்நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதற்கு அரசுதான் பொறுப்புகூறவேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு, அணைகட்டுவது குறித்து சிந்திப்பதில் பயன் இல்லை.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும். பிரதமர் வீடு செல்ல வேண்டும். மக்களின் கோரிக்கை இதுவே. அதற்காகவே நாம் பிரேரணைகளை முன்வைத்துள்ளோம்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment