DSC09983
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து அரசுக்கு எதிராக போராட்டம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.

DSC09976 DSC00020 DSC09967 DSC00018 DSC09973 DSC00011 DSC00027 DSC09971 DSC00023 DSC09982 DSC00013

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...