ரயில்வே ஊழியர்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம்!

Share

நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அடையாள வேலைநிறுத்தம் நாளை (28) நள்ளிரவு வரை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர் யூனியன், ரயில்வே ஊழியர் சங்கம், ரயில் தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...