IMG 20220401 WA0004
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்! – வேலன் சுவாமிகள்

Share

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்ற ரீதியில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும் போன்ற விடயங்களை ஆராயும் சந்திப்பாக இது அமைந்தது.
இந்த சவால்களுக்கு மத்தியில் ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பேசினோம்.

பொதுத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அமைப்பு என்ற ரீதியில் நாமும் சில கருத்துக்களை முன்வைத்தோம். வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசத்தில் அரசியல் நிலைப்பாட்டை குறிக்கும் நோக்கில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

வடக்கு கிழக்கில் 5 வருடத்துக்கான நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக நிதிகள் மற்றும் நிர்வாகத்தை சுதந்திரமாக கையாள முடியும். இந்த நிலைப்பாடு எட்டப்பட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் கிடைக்குமானால் பொருளாதாரம் உள்ளிட்ட பலவற்றுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு எமது நிலைப்பாட்டை கூறியிருந்தோம்.- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...