lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கவே கிடைக்காது! – அடித்துக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தவேளை, அது தவறான நடவடிக்கை என எதிரணியாகிய நாம் சுட்டிக்காட்டினோம். திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு இந்த 20 வும் பிரதான காரணமாகும்.

நாடாளுமன்றம் வசம் இருந்த அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தால் எவ்வாறு தீர்வை தேட முடியும் என்பதை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 20 ஐ இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இது காலம் கடந்த ஞானம். எனவே, புதிய அரசு அமைந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வை தேட முடியும்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...