ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களாலேயே, வொஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப். தலைமையகத்துக்கு முன்பாக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளை அடிக்கப்பட்டுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
நிதி அமைச்சர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ள பின்புலத்திலேயே இந்த போராட்டமும் இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment