அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய வரைபு ஒன்றை அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment