தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி.
த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் உட்பட பலருடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக பூமி திரைப்படம் வெளிவந்தது. முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயம் ரவி அகிலன், ஜன கண மண உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ஒன்றிழும் கீர்த்தி சுரேஸ் நாயகியாக நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அறிமுக இயக்குனர் ஆண்டனி படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment