கார் விபத்து
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கார் விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

Share

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததுடன், 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் மேலும் ஒருவரும், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அத்துடன் 4 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...