நாடு முழுவதும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடங்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியப் பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு,அரசின் பங்குள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை உப்பட 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் கலந்து கொள்வதாகவும் 28ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மக்கள் கருத்துக்கு, கௌரவம் அளித்து முடிவெடுக்கும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் எனவும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment