vijitha herath
அரசியல்இலங்கைசெய்திகள்

குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்! – விஜித ஹேரத்

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

எனவே, திமிர் பிடித்து செயற்படும் இந்த அரசுக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும். அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், குற்றப்பிரேரணையை முன்வைக்க நாம் தயார். ஏனெனில் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியாக வேண்டும்.

அரசமைப்பு ரீதியில் இந்த ஜனாதிபதியையும், அரசையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

#SriLAnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...