vavuniya 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சத்தம் சந்தடியின்றி வடக்கு மாகாண மருத்துவமனைகள் மத்தி வசமாகினவா?

Share

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில்போடப்பட்டிருந்த நிலையில், திடீரென வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாகாண அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட 9 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 4 மருத்துவமனைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மருத்துவமனைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மாகாண அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த 9 மருத்துவமனைகளில் வடக்கு மாகாணத்தின் 4 மருத்துவமனைகள் தவிர்ந்து தென்பகுதியிலுள்ள 5 மருத்துவமனைகளில் 4 மருத்துவமனைகள் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு, மத்திய அரசால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கடமைக்கு சமூகமளித்தனர். இதேவேளை அங்கு மாகாண நிர்வாகத்தால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் கடமையிலிருந்தனர்.

மாகாண நிர்வாகத்துக்கு எந்தவொரு முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மாகாண மருத்துவமனைகளை சத்தம் சந்தடியில்லாமல், மாகாண நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் மத்திய அரசின் கீழ் உள்வாங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...