mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிகாரிகளை வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் மஹிந்த பணிப்பு!

Share

நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலையின் தொடராக பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் ஏனைய அமைச்சுக்களில் உள்ள ஏனைய அதிகாரிகளை வீட்டிலிருந்தே தமது கடமைகளைச் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருளை சேமிப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

“எங்கள் நாடு முன்னோடியில்லாத சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், எரிபொருளை சேமிப்பதன் ஒரு படியாக வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

மின்வெட்டுக்கு மத்தியிலும், இந்த அதிகாரிகள் தங்களால் இயன்ற வரையில் தங்கள் பணிகளைச் செய்து வருவதை நான் நன்றியுடன் ஒப்புக்கொள்கிறேன்.

ஓர் அரசாக, இந்த நெருக்கடியின் விளைவாக மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்தச் சவால்களைக் கடக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

பல இடர்பாடுகள் இருந்தபோதிலும், மக்களின் பொறுமையுடனும் மற்றும் ஆதரவுடனும் முப்பது வருட பயங்கரவாதம், கொரோனாத் தொற்று நோய் உட்பட பல சவால்களை வெற்றிக் கொண்ட வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.

இந்தச் சவாலையும் அதே வழியில் முறியடிக்க தாய்நாட்டின் பெயரால், அனைத்துப் பிரிவினைகளையும் மறந்து கைகோர்ப்போம்” – என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...