murukandy acchidant 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி விபத்தில் பலி! – மேலும் மூவர் படுகாயம்

Share

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டிப் பகுதியில் ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஏ – 9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பஸ் மோதியுள்ளது.

இந்த விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மணவாளன்பட்டமுறிப்புப் பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பத்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாகப் பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயமடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.

படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...