IMG 20220330 WA0003
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹட்டனில் அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்! – வீதிகளை மறித்து போராட்டம்

Share

ஹட்டன் நகரில் உள்ள பிரதான வீதிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஹட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29.03.2022) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று (29.03.2022) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணிக்கு டீசல் விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், அந்த உறுதி மீறப்பட்டதால் சாரதிகள் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவருவதுடன், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 5
இலங்கைசெய்திகள்

பெருந்தொகையான கட்டணத்தை செலுத்தாமல் அநுர அரசை ஏமாற்றிய மகிந்த குடும்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின்...

14 5
செய்திகள்

தமிழருக்கு 13ஐ வழங்குவோம் என கூறியவர்களின் இன்றைய நிலை: நாமல் விசனம்

தமிழர்களுக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை வழங்குவோம் என்று கூறியவர்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என...

13 9
இலங்கைசெய்திகள்

கடன்கள் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு… முன்னரே அம்பலமான விடயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடன் பெறுவது குற்றமல்ல என எதிர்க்கட்சியில் இருக்கும் போதே கூறியிருந்ததாக மக்கள்...

10 11
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...