வைகோ
அரசியல்இந்தியாசெய்திகள்

திராவிட இயக்கத்தைக் கட்டிக் காக்க முன்வாருங்கள்! – இளைஞர்களுக்கு வைகோ அழைப்பு

Share

“திராவிட இயக்கம் தொடர்ந்து செயற்படுகின்றது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள் கட்டிக் காக்க வேண்டும்.”- இவ்வாறு ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

ஈரோடு சூரம்பட்டி நால் வீதியுள்ள புதுப்பிக்கப்பட்ட ம.தி.மு.க.அலுவலகம் திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வைகோ மேலும் தெரிவித்ததாவது:-

“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கட்டிக்காத்து வரும் திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சனாதன அமைப்புகள் ஊடுருவ முயற்சிக்கின்றன.

இந்த ஊடுருவலைத் தடுக்க இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். பெரியாரின் சிந்தனைகளை, அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் எழுத்துக்களை இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். திராவிட பாசறைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டும்” – என்றார்.

#IndiyanNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...

04 2
செய்திகள்உலகம்

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை சேதம்: யுனெஸ்கோ அமைப்பு கடும் கவலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தற்போதைய...