கோர விபத்தில் மாணவி மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதி விபத்தில் மாணவி பரிதாப மரணம்!

Share

வீதி விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தியத்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்துக்கு முன்னால் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தியத்தலாவைப் பொலிஸார் தெரிவிக்கையில்,

“மோட்டார் சைக்கிளும் நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவியே மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 29 வயதுடைய நபர் தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்ட காவு வண்டி தியத்தலாவை வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் அந்தக் காவுவண்டியை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நோயாளர் காவு வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...