லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் - மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!
செய்திகள்உலகம்

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

Share

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கோடை காலம் ஆரம்பிக்கத் தொடங்கும் நிலையில், இந்த வாரம் முழுவதும் லண்டனில்
சூடான மற்றும் வறண்ட காலநிலையை உணர முடியும். இங்கிலாந்தின் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக லண்டன் இருக்கும் என்று வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகள் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக 26 செல்ஸியஸ் வெப்பநிலையில் காணப்படும்.

வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரிகளின் அறிக்கையின்படி, லண்டன் உட்பட இங்கிலாந்தின் பல பகுதிகள் வழக்கத்தை விட, இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாரம் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வாகக் காணப்படினும், வட கடலில் இருந்து வீசக்கூடிய காற்று காரணமாக, சில பிராந்தியங்கள் வாரத்தின் இறுதிப் பகுதியில் குளிர்ச்சியாக காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.

குறிப்பாக புதன்கிழமை (இன்று முதல் ), இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பகுதிகளில் வெப்பநிலையானது 24 செல்ஸியஸ் உச்சத்தை எட்டக்கூடும், அதே நேரத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் மேற்கு பகுதிகள் 26 செல்ஸியஸ் வரை இருக்கும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது, வடக்கு பகுதியிலிருந்து வீசம் காற்றால், குறைவடைந்து செல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த வார இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடி தாக்கியபோது மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இது நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இதேவேளை, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள் வழக்கத்தை விட வறட்சியடைந்து காணப்படுகின்றன. தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் அண்மையில் அடைமழை பெய்தது. இதனால், நாடு இந்த மாதத்துக்கான அதன் சராசரி மழைப்பொழிவில் 72% ஐக் கண்டுள்ளது.

இருப்பினும், இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் கிடைக்கவுள்ள மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க சாத்தியம் உள்ளது என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...