Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தல் வரும்போது எமது பலம் தெரியும்! – சஜித்துக்கு ஜோன்ஸ்டன் சவால்

Share

” இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். – இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” ஐக்கிய மக்கள் சக்திக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குவதற்கு மூன்று நாடுகள் தயார் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அவர் கூறுவது உண்மையெனில், அந்நாடுகளுடன் பேச்சு நடத்தி முதலில் எரிபொருளை கொண்டுவரட்டும். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரிக்கும். இதோ, கோத்தாவால் முடியாததை சஜித் செய்துவிட்டார் என மக்கள் பாராட்டுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் அவர் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் அவர் தலைமையிலான ஆட்சி எப்போது வரும் என தெரியாது. அதுமட்டுமல்ல இப்பிரச்சினைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வை கண்டுவிடுவோம். வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படும். எனவே, முடிந்தால் எரிபொருளை வரவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் ஒளியவில்லை. மக்களுடன்தான் இருக்கின்றோம். தேர்தலொன்று வரும்போது அரசின் பலம் தெரியவரும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...