அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் சில்லறைத்தனமானவை! – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் லக்‌ஷ்மன்

Share

” புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை. அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இச்சட்டத்தின் பிரகாரம் பிடியாணையின்றி ஒருவரை கைது செய்யலாம். வீட்டை சோதனையிடலாம். வாகனங்களை பறிமுதல் செய்யலாம். பொலிஸார் சீருடையின்றி போகலாம். இவ்வாறு செய்வது சரியா?

கைது செய்யப்படும் நபரை 72 மணிநேரம் தடுத்து வைக்கலாம். இந்த காலப்பகுதிக்குள்தான் எல்லாம் நடக்கும். பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படும். எனவே, 24 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நாம் கோருகின்றோம்.

18 மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதை ஒரு வருடமாக்கப்பட்டுள்ளது. அதனை இரு மாதங்கள்வரை குறைக்குமாறு பரிந்துரைக்கின்றோம். தீவிரவாதிகளுக்காக நாம் இந்த சலுகைகளை கோரவில்லை, நாட்டு மக்களுக்காகவே கோருகின்றோம். ஏனெனில இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு மட்டும் தாக்கம் செலுத்தப்போவதில்லை. மக்கள்மீதும் பாயும். ” – என்றார் கிரியல்ல.

எனினும், திருத்தங்களை ஏற்பதற்கு வெளிவிவகார அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். அதற்கான காரணம் தனது பதில் உரையின்போது விளக்கமாக வழங்கப்படும் என பீரிஸ் குறிப்பிட்டார்.

அதேவேளை, இறுதி இறுதியான சட்டம் அல்ல, எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் ஆளுந்தரப்பால் வழங்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...