யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!

Share

மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியில் யானை தாக்கிப் படுகாயமடைந்திருந்த குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சதனாந்தன் சுதா என்னும் 46 வயது பெண்ணே உயிரிழந்தார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டது. அதனால் வெளியே வந்த குடும்பத் தலைவர் டோ ச் லைட் அடித்து அவதானித்தார். இதன்போது அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்தார்.

அப்போது யானை ஒன்று அவர்களது காணிக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்தது. அதனால் கணவர் ஓடி வீட்டுக்குள் நுழைந்தபோதும் மனைவி ஓடி மறைவாக இருந்தார்.

இதன்போது வீட்டுக்கு வெளியே மறைவில் இருந்த பெண்ணை யானை தாக்கியது.

யானை தாக்கிப் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அறிக்கையிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...