IMG 20220317 WA0123
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாம் மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல! – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி

Share

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோமென யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ரூ.100,000 கொடுப்பனவு, மரணச் சான்றிதழும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தொடர்பாக இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் அலுவலகம் , இழப்பீடு, மரண சான்றிதழ் போன்ற விடயங்களை நாங்கள் ஏற்க மறுத்ததால் தற்போது வாழ்வாதார உதவி என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க முற்படுகின்றனர். யாருமே இந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளக்கூடாது. எமது பிள்ளைகளுக்கான கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவா?

கடந்த காலங்களில் எமது பிள்ளைகள் காணாமல் போவதற்கு பிரதானமாக செயற்பட்டவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். அவர் இன்று எமது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவிகள் தரப்போவதாக கூறுகிறார்.

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...