ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இணையத்தளம் ஊடாக பாரியதொரு பரப்புரை சமரை ஆளுங்கட்சி முன்னெடுத்துள்ளது.
#WeAreWithGota (நாங்கள் கோட்டாவுடன்) எனும் தொனிப்பொருளின்கீழ் இதற்கான பரப்புரை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச ஆதரவாளர்கள் தமது சமூகவலைத்தங்களில் மேற்படி ஹேஷ் டெக்குடன், ஜனாதிபதிக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ‘பெயில்’ எனவும், அவர் வீடு செல்ல வேண்டும் எனவும் எதிரணி தரப்பில் டிஜிட்டல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே, ஆளுந்தரப்பும் இவ்வாறானதொரு நகர்வில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவர் தேர்தல் பரப்பரையின்போது பயன்படுத்திய பாடல்களை வைத்து, வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்டுவருவதையும் காணமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment