பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் – என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி ஆரம்ப பஸ் கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்குமாறும், ஏனைய கட்டணங்களையும் உரிய வகையில் அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் பஸ்களுக்கு பழைய விலையில் ‘டீசல்’ பெற்றுக்கொடுக்கப்படுமானால் விலை உயர்வு மேற்கொள்ளப்படாது என பஸ் உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment