20220312 071632 scaled
செய்திகள்இலங்கை

சிறப்புற நடைபெற்ற கச்சதீவு திருவிழாத் திருப்பலி!

Share

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்று கொடியேற்றத்தையடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இந்தத் திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் அவர்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் விஜேகுணரட்ண, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்தத் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....