shan colombo 4 1
செய்திகள்அரசியல்இலங்கை

மருதானையிலும் கையெழுத்து வேட்டை!

Share

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு – மருதானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பான ஆவணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

அத்துடன், அரசியல் செயற்பாட்டாளர் விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் இதன்போது கையெழுத்திட்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...