விமல் கம்மன்பில
செய்திகள்அரசியல்இலங்கை

விமல், கம்மன்பில உள்ளிட்ட 16 எம்.பிக்கள் சுயாதீனமாகச் செயற்பட முடிவு

Share

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் 16 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற பேச்சையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிணங்க, அரசின் பங்காளிக் கட்சிகளாகச் செயற்படும் விமல் வீரவன்சவின் கட்சியில் 6 எம்.பிக்களும், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியிலிருந்து இரண்டு பேரும், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்னதேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட 16 பேரே நாடாளுமன்றத்தில் இவ்வாறு சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளைச் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...