கோட்டாபய
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? – கோட்டா சீற்றம்

Share

“அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? அமைச்சரவையிலிருந்து இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும். இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன்.”

-இவ்வாறு கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் 69 இலட்சம் மக்களின் ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன். எனக்கு ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றவும் மாட்டேன்; அவர்களுக்குத் துரோகம் செய்யவும் மாட்டேன்.

நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் இருக்கும் சிலர், பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாகச் செயற்படுகின்றனர். அரசைக் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அமைச்சுப் பதவி எதற்கு?

அரசை வீழ்த்துவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. எமது அரசை எவராலும் அசைக்கவே முடியாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...