இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து தான் வைரஸ் தொற்று அதிகம் பரவுவதாக ஹாங்காங் அரசு குறிப்பிட்டுள்ளது.
நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த தடை உத்தரவு மார்ச் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.
#IndiaNews
Leave a comment