pearl one news ali safry
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கா? – மறுக்கிறார் அலி சப்ரி

Share

பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்டமூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கானதல்லவென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் அனைவரும் ஒரே மனப்பான்மையுடன் செயல்பட வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். எனினும் அவர்களது நல்லாட்சி அரசில் ஏன் அதனை மேற்கொள்ளவில்லையென நான் கேட்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

மூலங்கள் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர்,

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதல்ல என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எமது அரசாங்கம் 48 வருடங்களுக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசேட குழு அமைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தக் குழுவிடம் ஆலோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் தனியார் சுதந்திரத்தைப் பலப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. ஒருபோதும் அவை சர்வதேசத்தை திருத்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட விடயமல்ல. அரசியலமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு அதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...