725248 axeattack 1403388681
செய்திகள்இலங்கை

வவுனியாவில் தலையில் வெட்டுக் காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் மீட்பு!

Share

செட்டிக்குளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07.02) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (06.02) மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற இளம் குடும்பஸ்தர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...