maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி! – மக்கள் விருப்பம் அதுவே என்கிறார் மைத்திரி

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சுதந்திரக்கட்சிக்கான கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

” எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார்.

இன்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றது. சுதந்திரக்கட்சி ஆட்சியை மக்கள் கோருகின்றனர். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிப்போம்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்தி, புதிய ஆட்சிக்கான வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...