uni
செய்திகள்உலகம்சுகாதாரம்

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

Share

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (Unicef) எச்சரித்துள்ளது.

காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று தொடர்புபடுத்தியிருக்கும் சிறுவர் நிதியம், அதன் விளைவுகள் உலக நாடுகளில் சிறுவர்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற அளவுச் சுட்டியை வெளியிட்டிருக்கிறது.

பருவநிலையும் சூழல் பாதிப்புகளும் ஏற்படுத்துகின்ற அதிர்ச்சிகள் நேரடியாக சிறுவர்களது வாழ்வுக்கான உரிமைகளையே பாதிக்கின்றன. வெப்பம், புயல், மழை, மாசு என எல்லா வடிவங்களிலும் தோன்றும் சீற்றங்கள் சிறுவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளைத் தடுக்கின்றன-என்று சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதி உச்ச அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படவுள்ள நாடுகளின் தர வரிசையில் முதல் இடங்களில் ஆபிரிக்க நாடுகளான மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், நைஜீரியா ஆகியவை உள்ளன. அவற்றுக்கு அடுத்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய தென்னாசிய நாடுகளும் அடங்கியுள்ளன.

மிகவும் அதிகளவு காபன் வெளியேற்றுகின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சிறுவர்களது எதிர்காலம் மிக ஆபத்தான திசையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உலகளாவிய மதிப்பீட்டு ஆய்வுகளின் படி- 240 மில்லியன் சிறுவர்கள் கடற்கரையோர வெள்ளம் காரணமாகவும், 400 மில்லியன் சிறுவர்கள் புயல்கள் காரணமாகவும், 820 மில்லியன் சிறுவர்கள் வெப்ப அனல் வீச்சாலும், 920 மில்லியன் சிறுவர்கள் தண்ணீர் பற்றாக்குறை
காரணமாகவும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி கிரேட்டா துன்பேர்க்,(Greta Thunberg) காலநிலை பாதிப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளிக்கிழமைகள் தோறும் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தை கடந்த 2018 இல் ஆரம்பித்திருந்தார்.அந்த இயக்கம் உலகெங்கும் சிறுவர்கள் மற்றும் இளவயதினரிடையே “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமை”( Friday for future) என்னும் பெயரில் பிரபலமாகிப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளைப் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த இயக்கம் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுவீடனில் கிரேட்டாவின் மாணவர் இயக்கம் தொடக்கப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவு நாளில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...