Mahindanatha aluthkamake
செய்திகள்அரசியல்இலங்கை

ஏழு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்! – கூறுகிறார் மஹிந்தானந்த

Share

“அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால், முகநூலில் அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி. மறுபுறத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித்தும் கதைக்கின்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டை சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்.

கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயகம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...